அவிநாசியில் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து அதிமுக தீவிர ஆலோசனை

அவிநாசியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றார்.

திருப்பூர் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி. ஜெயராமன் பேட்டி. வரும் 9-ம் தேதி அவிநாசியில் பிரம்மாண்ட முறையில் எடப்பாடியார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது திருப்பூர் மாநகர மாவட்டத்தில் இருந்து 30 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.1300 கோடியில் எடப்பாடியாரால் தூவங்கி வைக்கப்பட்ட 4வது திட்டத்தை எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் வெட்கமில்லாமல் வந்து உதயநிதி திறந்து வைக்க போகிறார் டவுன்ஹாலில் கட்டப்படும் வரும் வளாகத்திற்கு கருணாநிதி பெயர் வைத்தால் மிகப்பெரிய போராட்டம் அதிமுக சார்பில் நடத்தப்படும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தான் திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர் தமிழகத்தில் உள்ள தொழில்கள் நசிந்து விட்டன ஆனால் முதல்வர் ஸ்பெயின் நாட்டிற்கு தொழில் துறையினரையை உருவாக்குவேன் என்று உல்லாச பயணத்திற்கு சென்றுள்ளார் செயற்கை அவிநாசி ஆர்ப்பாட்டத்தில் செயற்கையாக ஏற்படுத்தக்கூடிய மின்தடையை வன்மையாக கண்டிக்கத்தக்கத்து.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் கூட்டணி குறித்து முடிவெடுப்பார். அவிநாசி ஆர்ப்பாட்டத்திற்கு வரும் வாகனங்களை தடுத்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் ஆலோசனைக் கூட்டத்தில் பேட்டி அளித்தார்.

Tags

Next Story