அதிமுக பிரமுகர் மனைவி மறைவு- எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
மேச்சேரி அதிமுக பேரூர் செயலாளர் சி.ஜெ.குமார் மனைவி சிவகாமியின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேச்சேரி அதிமுக பேரூர் கழக செயலாளர் சி.ஜெ.குமார் (54).இவரது மனைவி சிவகாமி (49) இவர் கடந்த 8-ம் தேதி உடல் நல குறைவால் காலமானார். இதனையடுத்து நேற்று அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி கே.பழனிசாமி சி.ஜெ.குமார் இல்லத்திற்கு நேரில் சென்று மறைந்த சிவகாமியின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன், முன்னாள் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி, சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் லலிதா சரவணன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அதிமுக கட்சி பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்
Next Story