அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
அதிமுக சார்பில் சிவகங்கை தனியார் மண்டபத்தில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் இளைஞர் - இளம்பெண்கள் பாசறை மகளிர் அணி கமிட்டி அமைப்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும் கழக அமைப்பு செயலாளருமான AK.சீனிவாசன் கழக நிர்வாகிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கட்சி பணியாற்ற வேண்டும். அப்பொழுதான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எளிதாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், நாகராஜன், கற்பகம் இளங்கோ, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், நகரச் செயலாளர் ராஜா மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
