அ.தி.மு.க.,வினர் காத்திருப்பு போராட்டம்

அ.தி.மு.க.,வினர் காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம் 

மல்லசமுத்திரம் பஸ்டாண்டில், அரசு அளவீடு செய்த இடத்திற்கு மாறாக சுற்றுச்சுவர் கட்டிவருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.,கவுன்சிலர், நகர செயலாளர் உட்பட பலர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் டவுன்பஞ்சாயத்தில் தற்சமயம் ரூ.89லட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவருடன் கூடிய சைக்கிள்ஸ்டாண்டு, பயணிகள் இருக்கை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணிகளுக்காக, கடந்தசில மாதங்களுக்கு முன்னர், பேருந்து நிலையத்தின் எல்லையை அதிகாரிகள் அளவீடுசெய்து, சுற்றுச்சுவர் கட்டும் இடங்களில் பெயிண்ட் அடித்தனர்.

ஆனால் தற்சமயம், அரசுஅளவீடு செய்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்டாமல், அந்த இடத்தைவிட்டு குறைத்து வேறுஇடத்தில் சுற்றுச்சுவர் கட்டிவருவதாக டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தை குற்றம்சாட்டி நேற்று மாலை 5மணிமுதல் 6மணிவரையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த 11வது வார்டு கவுன்சிலர் தங்கமணிகுமார், 1வதுவார்டு கவுன்சிலர் சரவணன், அ.தி.மு.க., நகரசெயலாளர் சுந்தரராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் காத்திருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, 11வது வார்டு கவுன்சிலர் தங்கமணிகுமார் கூறியதாவது; மல்லசமுத்திரம் பஸ்ஸ்டாண்டில் சுற்றுச்சுவர் அமைக்க ஏற்கனவே அரசு அளவீடு செய்து முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது அருகாமையில் உள்ள தனியாருக்கு 350 சதுர அடியை விட்டுவிட்டு அளவீடு குறைத்து அளவிட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. டவுன் பஞ்.,க்கு சம்பந்தமான இடம் தனியாருக்கு செல்வதால் ஆக்கிரமிப்பு அகற்றி, சரியான அளவீடு செய்து முறையாக சுற்றுசுவர் கட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தகவலறிந்துவந்த எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், பரபரப்பு நிலவியது.

Tags

Next Story