கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றி பெறும்; பசிலியான் நசரேத் உறுதி

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றி பெறும்;  பசிலியான் நசரேத் உறுதி

 கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் கூறினார். 

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் கூறினார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் இன்று தடிக்காரன்கோணம் பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்கினார். இன்று பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது:- நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றத்தை நோக்கி வாக்களிக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனுக்கு பிறகு மீன இனத்தைச் சேர்ந்த எனக்கு அதிமுக வாய்ப்பளித்துள்ளது.

பாரதிய ஜனதா அரசு செயல்படுத்தி வரும் சர்வதேச கொள்கைகள் உள்ளூர் விவசாயத்தையும், விளைச்சல்களையும், சிறு தொழில்களையும் குழி தோண்டி புதைத்து இருக்கிறது. ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு சாதகமாக இறக்குமதிகளையே ஊக்குவித்து வருகிறது என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

குமரி மாவட்டத்தில் சுமார் 52,000 ஹெக்டேரில் நடந்த விவசாயம் தற்போது பத்தாயிரம் ஹெக்டராக சுருங்கி உள்ளது. குமரி மாவட்டத்தில் இயற்கை அழிப்பு, கனிமவள கொள்ளையால் காற்றின் நிலை மாறுகிறது. குமரி வழியாக 24 மணி நேரமும் கனிம வள கடத்தல் நடக்கிறது. இதை தடுக்க வேண்டும்.

இதற்காக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். அதிமுக பெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலோர கிராமங்களில் அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளது. பிரச்சாரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்றார்.

Tags

Next Story