அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் !

அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் !

அதிமுக

அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நாமக்கல் ரோட்டில் உள்ள வேலுசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை வகித்தார்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஹா தமிழ்மணியை ஆதரித்து திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நாமக்கல் ரோட்டில் உள்ள வேலுசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை வகித்தார். பரமத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர், முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு நகர செயலாளர் அங்கமுத்து வர வேற்றார். நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் விஜய் சரவணன், தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் சுபா, ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். செயல்வீரர்களிடம் ஆதரவு கேட்டு வேட்பாளர் ராஹா தமிழ்மணி பேசியபோது கூறியதாவது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். நான் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவன். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி உங்களுக்காக உழைப்பேன். எனக் கூறினார். முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியபோது கூறியதாவது அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கூடிய உள்ள கூட்டம். இவர்கள் நினைத்தால் தான் வெற்றி பெற முடியும். வேட்பாளர் தமிழ்மணி வெற்றி பெற்றால் சிறப்பாக செயல்படுவார். 2 முறை சின்னம் முடக்கப் பட்டபோதும் மீட்டெடுத்த இயக்கம் அதிமுக. இந்த தேர்தலோடு துரோக கும்பலுக்கு முடிவு கட்டப் படும். திமுக 29 கட்சியுடன் கூட்டணி பிரதமர் வேட்பாளரை சொல்லவில்லை. நமக்கு மக்கள் தான் பிரதமர் வேட்பாளர் என கூறி வாக்கு கேட்க வேண்டும். காவிரியில் தண்ணீர் பெற 23 நாட்கள் பாராளமன்றத்தை முடக்கிய இயக்கம் அதிமுக. கர்நாடக துணை முதல்வர் ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது என்று சொன்ன போது மறுத்து குரல் கொடுக்காதவர்கள் திமுகவினர் நமது உரிமைகளை பெற நமது வேட்பாளர் தமிழ்மணி குரல் கொடுப்பார்கள். ஈஸ்வரனும் மதுரா செந்திலும் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க சொன்னார்கள் நீங்கள் தாலிக்கு தங்கம் எங்கே என்றும், லேப்டாப் எங்கே என்று கேளுங்கள் போதைப் பொருள் புழக்கம் பற்றி கேளுங்கள். உங்களுக்கு வாக்களித்து எங்கள் குழந்தைகள் போதை பொருளுக்கு அடிமையாக வேண்டுமா என கேளுங்கள். லாட்டரி ஒழித்த இயக்கம் அதிமுக லாட்டரி அதிபரிடம் நிதி வாங்கிய இயக்கம் திமுக என கூறுங்கள். வீடு வீடாக சென்று கேளுங்கள். 65 பேர் பூத் கமிட்டி நியமித்துள் ளோம் பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றுத் தருவது உங்கள் கடமை. ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் என கூறிவிட்டு எல்லோருக்கும் தந்தார்களா என கேளுங்கள். 50 சதவீதம் பேருக்கு தான் தருகிறார்கள். இதுவும் எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கூறுங்கள் கொடுப்பது ஆயிரம் கூடுதல் செலவு 2 ஆயிரம் ஆகிறது விலைவாசி உயர்வு. ஆயிரம் கிடைக்காதவர்களை கண்டறிந்து அவர்கள் வாக்குகளை பதிவு செய்தால் நம் வெற்றி உறுதியாகி விடும். வாக்காளர் பட்டியலை சரிபாருங்கள இறந்தவர், வெளியூர் சென்றவர் வாக்களிக்க முடியாரவர்களை இனம் காணுங்கள். வாக்குசாவடிகளில் கவனமாக இருக்க வேண்டும். 1660 பூத் உள்ளது பூத்திற்கு 10 ஒட்டு போனால் 16 ஆயிரம் ஓட்டு போய்விடும். அதிமுக பரவாயில்லை என திமுக தொண்டன் நினைக்கும் அளவுக்கு திமுக ஆட்சி உள்ளது. 15 நாட்கள் உழைப்பு தான் நம் எதிர்காலம் என்பதை கவனித்து செயல்படுங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுங்கள் கருத்து வேறுபாடு இருந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் சிறப்பாக செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். ஈஸ்வரன் நமது வேட்பாளர் கோவைக்காரர் என கூறியுள்ளார். அது பொய் அவர் மண்ணின் மைந்தர். 2019ல் ஏன் சின்ராஜிக்கு சீட் கொடுத்தீர்கள் மாதேஸ்வரனுக்கு கொடுக்கவில்லை. பணக்காரர் என்பதால் தான் சின்ராஜிக்கு சீட் கொடுத்தீர்கள். நீதிமன்றத்தில் நிரபாரதி என கூறப்பட்ட வேட்பாளர் ஏன் மாற்றப்பட்டார். சூரியமூர்த்தி உண்மையான சுயரூபம் அது. பதவிக்காக எதை வேண்டுமானால் அவர்கள் செய்யட்டும். நாம் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. பதவிக்கு வரும் முன்பே போலீசை மிரட்டும் வேட்பாளரை எப்படி 12 மணிக்கு சந்திக்க முடியும். திமுக எதிர்ப்பு வாக்குகள் முழுமையாக அதிமுகவுக்கு வர வேண்டும். 10 ஆண்டு அமைச்சராக இருந்து நான் செய்த பணிகளை பட்டியிலட தயார் விவாவித்த ஈஸ்வரனோ மதுரா செந்திலோ தயாரா ஸ்டிக்கர் ஒட்டுகிற இயக்கமல்ல அதிமுக. ரிங் ரோடு பணி நான் கொண்டு வந்தது என ஈஸ்வரன் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. பொய்யை மீண்டும் சொன்னால் நம்பி விடுவார்கள் ஆகவே நீங்கள் வீடுவீடாக சென்று உண்மையை எடுத்து கூறுங்கள் என கூறினார்.

Tags

Next Story