ஆத்தூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்
ஆத்தூர் மஞ்சினியில் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு மாவட்ட செயலாளர் இளங்கோவன் திறந்து வைத்தார் .
தமிழக முழுவதும் கோடை வெயிலில் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆங்காங்கே நீர்மோர் இளநீர் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்கள் குடிநீர் தேவையை தீர்க்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார் சேலம் மாவட்டம் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மஞ்சினியில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது இளநீர் கம்மங்கூழ் தர்பூசணி மோர் ஆகியவற்றை அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார் உடன் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் விபி.சேகர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story