கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுகொள்ளப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் கமல்கிஷோா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். முன்னதாக, கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஷேக் அப்து ல்காதா், தொழிலாளா் உதவி ஆய்வாளா் (தென்காசி) சபரீசன், தொழிலாளா் உதவி ஆய்வாளா் (சங்கரன்கோவில்) சத்யநாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags

Next Story