காசநோயாளிகளை தத்தெடுக்கும் நிகழ்ச்சி

காசநோயாளிகளை தத்தெடுக்கும் நிகழ்ச்சி

உதவிகள் 

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளை தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கோவில்பட்டியில் ' நிக்சய் மித்ரா' எனும் திட்டத்தின் கீழ் காசநோயாளிகளை ஆசியாபார்ம்ஸ் நிறுவன அதிபர் பாபு தத்தெடுத்து கொண்டார். சிகிச்சை காலம் முடியும் வரை அக்குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் போன்றவற்றை வழங்கினார். ஒவ்வொரு மாதமும் இதேபோன்று காசநோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்படும் மேலும் இன்று புரதம் சார்ந்த உணவான நிலக்கடலை போன்றவை அதிக அளவில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் காசநோயாளிகளுக்கு உதவி செய்த ஆசியாபார்ம்ஸ் பாபு அவர்களை பாராட்டி பேசினார்.மற்றும் காசநோய் பிரிவு மருத்துவர் சரஸ் மோனிக்கா, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், சுகாதார பார்வையாளர் மகேஷ் , முதுநிலை ஆய்வு கூடமேற்பார்வையாளர் தனசெல்வி சோபியா ஆய்வக நுட்புநர் லட்சுமி மற்றும் ஆசியாபார்ம்ஸ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கடம்பூர் காசநோய் பிரிவின் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் மற்றும் ஆசியா பார்ம்ஸ் நிறுவனம் இனைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Tags

Next Story