ஆட்சீஸ்வரர் - இளங்கிளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரம்

ஆட்சீஸ்வரர் - இளங்கிளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரம்

சந்தனக்காப்பு அலங்காரம்

ஆட்சீஸ்வரர் - இளங்கிளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரம்.
செங்கல்பட்டில் அச்சிறுபாக்கத்தில் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பிரமோற்சவம், இம்மாதம் 14ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 3-வது நாளன்று, அதிகார நந்தி சேவையில், 63 நாயன்மார்கள் வீதி உலாவும் நடந்தது. 5-வது நாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 7வது நாள், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடந்தது. அதில், 36 அடி உயரமுள்ள பெரிய தேரில், ஆட்சீஸ்வரர், இளங்கிளியம்மன் எழுந்தருளி அருள்பாலித்தனர். நேற்று, 9ம் நாள் நிகழ்வாக, பிக்ஷாடனமூர்த்தி புறப்பாடு மற்றும் ஆட்சீஸ்வரர் -- இளங்கிளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. இன்று, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரும்பேர்கண்டிகை - இரட்டைமலை சந்திப்பு பகுதியில், ஆட்சீஸ்வரர்- - இளங்கிளி அம்மன், அகஸ்தியருக்கு காட்சி தரும் நிகழ்வு நடைபெறுகிறது.

Tags

Next Story