கள்ளத்தொடர்பு - மனைவியை கொன்ற கணவன் கைது

கள்ளத்தொடர்பு - மனைவியை கொன்ற கணவன் கைது

பிரியங்கா குமாரி

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பிரிதேஷ் கைலாஷ், 32. இவரின் மனைவி பிரியங்கா குமாரி, 25. இவர்களுக்கு முன்று குழந்தைகள் உள்ளனர். படப்பை அருகே மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட குத்தனுாரில் தங்கி, கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை பிரியங்கா குமாரி தலையில் பலத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். கணவர் பிரிதேஷ் கைலாஷ் தலைமறைவானார். இதை பார்த்தவர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மொபைல் போன் சிக்னல் வாயிலாக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த பிரிதேஷ் கைலாஷை ரயில்வே போலீசார் உதவியுடன், மணிமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், பிரியங்கா குமாரி, தன் அக்கா கணவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால், அவரை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. மணிமங்கலம் போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.



Tags

Next Story