பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மீண்டும் விளம்பர பேனர்கள்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மீண்டும் விளம்பர பேனர்கள்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மீண்டும் விளம்பர பேனர்கள்

மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அமைக்கப்படும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக்கூடாது என, உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தன. இதனால், விளம்பர பலகைகள் கலாசாரம் சற்று குறைந்திருந்தது. ஆனால், மீண்டும் நகரின் பல இடங்களில் விளம்பர பலகைகள் முளைத்துள்ளன. சமீபத்தில் சென்னையில் தாக்கிய மிக்ஜாம் புயலின் போது, வானகரம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையோரம் உள்ள கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்தது. கன மழையால் வாகன போக்குவரத்து குறைவாகவும், பாதசாரிகள் நடமாட்டம் குறைவாகவும் இருந்ததால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை. தற்போது கோயம்பேடு மேம்பாலத்தை சுற்றி உள்ள கட்டடங்களில் விளம்பர பலகைகள் அதிகரித்துள்ளன. இதில், 'பார்முலா 4' கார் பந்தயம் குறித்த விளம்பர பலகையும் இடம் பெற்றுள்ளது. மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம் பகுதிகளிலும் விளம்பர பலகைகளை அகற்ற மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story