மதுரவாயலில் விளம்பர பேனர்கள் மீண்டும் அதிகரிப்பு

மதுரவாயலில் விளம்பர பேனர்கள்  மீண்டும் அதிகரிப்பு
பேனர்கள் வைப்பு 
மதுரவாயலில் விளம்பர பேனர்கள் மீண்டும் அதிகரித்துள்ளது.

மதுரவாயல்-தாம்பரம் புறவழிச்சாலை மற்றும் வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் விளம்பர பேனர்கள் அதிகரித்துள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் அமைக்கப்பட்ட விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும் விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விளம்பர பலகைகள் எண்ணிக்கை குறையாமல், அதிகரித்தபடி உள்ளது. ஆனாலும் தற்போது, வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல்-தாம்பரம் புறவழிச்சாலை மற்றும் மதுரவாயல்-பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகரம் ஊராட்சி பகுதி என, பல இடங்களில் மீண்டும் விளம்பர பலகைகள் அதிகரித்துள்ளன.

இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story