அமராவதி தண்ணீரைக் காய்ச்சி குடிக்க 'அட்வைஸ்'

அமராவதி ஆற்றில் அதிகப்படியான உபரி நீர் வெளியேறுவதால், காய்ச்சி குடிக்குமாறு பள்ளப்பட்டி நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

அமராவதி ஆற்றில் அதிகப்படியான உபரி நீர் வெளியேறுவதால், காய்ச்சி குடிக்குமாறு பள்ளப்பட்டி நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது அமராவதி அணையாகும். இந்த அணையின் கொள்ளளவு திறன் 90 அடி ஆகும். நேற்று மாலை வரை 89 அடிக்கு மேல் நீர் இருப்பு இருந்த நிலையில், அணைக்க கூடுதலாக தண்ணீர் வந்ததால், உபரி நீரை அமராவதி ஆற்றில் திறந்து விட்டனர். அமராவதி ஆற்றின் கடைமடை பகுதியாக கரூர் மாவட்டம் உள்ளது. குறிப்பாக ராஜபுரம் பிரிவு பகுதியில் அமராவதி ஆறு கரூருக்குள் நுழைகிறது. தற்போது அமராவதி ஆற்றில் அதிகப்படியான உபரி நீர் வந்து கொண்டிருப்பதால் பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தண்ணீரை காய்ச்சி பயன்படுத்துமாறு நகராட்சி சார்பில் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

Tags

Next Story