விழுப்புரத்தில் கம்பன் விழா நடத்துவது குறித்த ஆலோசனை
விழுப்புரத்தில் கம்பன் விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கம்பன் கழகத்தின் சார்பில் 41-ம் ஆண்டு கம்பன் விழா நடத்துவது சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம் விழுப் புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கம்பன் கழக தலைவர் தனபால் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில், துணை செயலாளர் பரமசிவம், பொருளாளர் வேங்கடவர தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விழாக்குழுவினர் காங்கேயன், அன்பழகன், அய்யப்பன், பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், வருகிற ஆகஸ்டு மாதம் 3 நாட்கள் கம்பன் விழாவை விழுப்புரத்தில் நடத்துவது என்றும், இவ்விழாவில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், எழிலுரை போன்ற நிகழ்ச் சிக்கு சிறந்த பேச்சாளர்களை அழைப்பது, முதல்நாள் விழாவை தொடங்கிவைக்கசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை அழைப்பது, சிறந்த சேவையாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.