நிலக்கடலை சாகுபடிக்கு தரமான விதைகளை பயன்படுத்த அறிவுரை.
பைல் படம்
தர்மபுரி விதை பரிசோதனை அலுவலர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தற்போது தர்மபுரி மாவட்டத்தில், பெய்துள்ள மழைக்கு பரவலாக நிலக்கடலை விதைப்பு நடைபெற்று வருகிறது. நல்ல விளைச் சலை பெற்றிட, தரமான நல்ல விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். விதையின் தேர்வு மட்டுமே விளைச்சலை நிர்ணயிக்கும். குறிப்பாக நிலக்கடலையில், குறித்த ஈரப்பதம் இருந்தால் மட்டுமே விதை வேரூன்றி வளர இயலும், இல்லையெனில் முளைக்கும் விதை போதுமான வலுவின்றி மேலும் வேரூன்றி முளைத்து தழைக்கும் பட்சத்தில் வயலில் பயிரின் எண்ணிக்கையை சமன் செய்ய இயலாது.
விதையின் புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் முளைப்புதிறன் போன்ற காரணிகளை வயலின் பயிர் எண்ணிக்கையை உறுதி செய்கிறது. சீரான பயிர் எண்ணிக்கையை பராமரித்தால் மட்டுமே. நல்ல மகசூல் கிடைக்கும். அவ்வாறு பராமரித்திட விதையின் தரத்தினை அறிந்து பயிரிட வேண்டும். விதை விபர அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிப்பார்த்து, விதைகளை வாங்க வேண்டும். விதை விபர அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம் முதலிய விவரங்களை சரிபார்க்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் செயல்படும் விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து ஆய்வு கட்டணமாக 80 செலுத்தி விதையின் தரமறிந்து சாகுபடி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.