சம்பா, தாளடி அறுவடைக்கு பின் எள், உளுந்து விதைக்க அறிவுறுத்தல்

சம்பா, தாளடி அறுவடைக்கு பின் எள், உளுந்து விதைக்க அறிவுறுத்தல்
உளுந்து
உளுந்து சாகுபடி குறித்து திருவையாறு வட்டார வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

திருவையாறு வட்டார வேளாண் உதவி இயக்குனர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது: நெல்லுக்குக்கு பின்னர் சாகுபடியில் எள் மற்றும் உளுந்து பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்த பிறகு நீர் பாய்ச்சி சரியான ஈரப்பதத்தில் எள், உளுந்து விதைக்க வேண்டும்.

இரண்டு மூன்று இலைப்பருவத்தில் இருக்கும்போது பயறு வகைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு இமாசிதிபர் 200 மிலி அல்லது குயிசலோ போப் எத்தில் 200 மிலி என்ற அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பூக்கும் தருணத்தில் டிஏபி உரம் 4 கிலோவினை முதல் நாள் ஊறவைத்து வடிகட்டி 200 லிட்டர் நீரில் கலந்து 15 நாட்கள் இடை வெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும் அல்லது 200 லிட்டர் நீரில் ஏக்கருக்கு 2 கிலோ பூக்கும் தருணத்தில் தெளித்தால் பூ உதிர்வது குறைந்து விளைச்சல் அதிகரிக்கும். எள் பயிருக்கு ஏக்கருக்கு 4 கிலோ அளவில் மாங்கனிசு சல்பேட்டை மணலுடன் கலைந்து தூவினால் காய் பிடிப்பு அதிகரிக்கும்.

நெல்லுக்கு பின் சாகுபடி செய்யும் பயிர்களில் பயிர் எண்ணிக்கை பராமரிப்பது மிகவும் அவசியம். தற்போது திருவையாறு வட்டாரத்தில் உள்ள அனைத்து வேளாண் விரி வாக்க மையங்களிலும் உளுந்து மற்றும் எள் விதைகள் இருப்பு வைக்கப்பட் டுள்ளன. இதனை விவசாயிகள் பெற்று பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story