உர பயன்பாடு குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

உர பயன்பாடு குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

பைல் படம் 

பழனியில் உர பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள் குறித்து வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
பழனியில் உர பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள் குறித்து வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மண் ஆய்வை பொறுத்து உரமிடுத்தலுக்கான அட்டவணை இருக்க வேண்டும். கார மண்ணிற்கு அமில உரங்களும், அமில மண்ணிற்கு கார உரங்களை அளிப்பது போன்ற மண் எதிர் விளைவுகளை பொறுத்து உரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். உரங்களை மேலோட்டமாக தெளிக்கக் கூடாது.உரங்களை 3 முதல் 4 சென்டிமீட்டர் அளவிற்கு விதையின் அருகிலோ அல்லது அடியிலோ இட வேண்டும். இதனால் களை வளர்ச்சியை தடுக்கலாம். மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும். மண் உருண்டைகளில் யூரியாக உள்ள உரங்களை பயிர்களுக்கு இட வேண்டும். இவ்வாறு வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story