குரூப்-4 போட்டி தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இஆப., தெரிவித்துள்ளதாவது தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வு தருமபுரி மற்றும் அரூர் கோட்டங்களில் மொத்தம் 228 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 228 தேர்வு மையங்களில் இத்தேர்வினை சுமார் 62,641 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்விற்க்கானஅனைத்து ஏற்பாடுகளும் அனைத்து தேர்வு மையங்களிலும் முழுமையாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் இத்தேர்வு நடைபெற உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், இத்தேர்விற்காக சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு செல்லவும்.
கடைசிநேர அலைச்சல்களை தவிர்க்குமாறும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து கடைபிடிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இஆப. தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதின் இப்ராகிம், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளார் தேன்மொழி, அனைத்து வட்டாட்சியர்கள் உடனிருந்தனர்.