தமிழ்நாடு பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்!

தமிழ்நாடு பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருச்செங்கோடு, சாந்தி மஹாலில், சங்கத்தின் மாநில தலைவர் பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருச்செங்கோடு, சாந்தி மஹாலில், சங்கத்தின் மாநில தலைவர் பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில செயலாளர் ஃபாரூக் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வருகிற மே 5ம் தேதி வணிகர் தினத்தன்று மதுரையில் நடைபெறவிருக்கும் 41வது வணிகர் விடுதலை முழக்க மாநாட்டில் அனைத்து வணிகர்களும் கடைகளுக்கு முழு விடுமுறை அளித்து குடும்பத்துடன் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கூட்டத்தில், மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்களை நியமனம் செய்வது, அடுத்த கூட்டத்தினை திண்டுக்கல் நகரில் நடத்துவது, ஜி.எஸ்.டி தொடர்பான பிரச்சனைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் மனு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், இளைஞரணி மாவட்ட செயலாளர் ராயல் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் கூட்டத்தில் நாமக்கல், ஈரோடு, சேலம், திண்டுக்கல், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பழைய இரும்பு வியாபாரிகள் திரளாக கலந்துகொண்டனர். விழா நிறைவில் தமிழ்நாடு பழைய இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் சிவசண்முகராஜன் நன்றி கூறினார்.

Tags

Next Story