தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட கட்சியினர்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையை வாட்சப் டெலிகிராம் போன்ற செயல்கள் மூலம் தொடங்கி வைத்து முதல் நபராக அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் விஜய் 2 கோடி உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகம் சேர்க்க வேண்டுமென கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடத்தி அதன் மூலம் எவ்வாறு உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்வது என்பது குறித்து கட்சியினருக்கு தெரிவிக்கும் வகையிலான ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவு பட்டு இருந்தது. அதை முன்னிட்டு இன்று இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார் விருதுநகர் மற்றும் திருச்சுழி சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் உறுதி மொழியை அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர் அதை தொடர்ந்து அனைத்து கிராமத்திற்கு சென்று தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது இந்த ஆலோசனை கூட்டத்திற்கு விருதுநகர் மற்றும் திருச்சுழி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 600க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story