தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான்நோக்கு நிகழ்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான்நோக்கு நிகழ்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான்நோக்கு நிகழ்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருப்பாலபந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வான்நோக்கு நிகழ்வு நடந்தது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வானியல் தொடர்பான பரப்புரை மற்றும் தொலைநோக்கி மூலம் நிலா, வியாழன், செவ்வாய், சனி போன்ற கோள்களை காணும் வான்நோக்கி நிகழ்வு திருப்பாலபந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

மாவட்ட அறிவியல் பிரசார இணை ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்க திருக்கோவிலுார் ஒன்றிய பொருளாளர் பச்சையப்பன் வரவேற்றார். எழுத்தாளரும், அறிவியல் இயக்க வட சென்னை மாவட்ட செயலாளருமான தேன்மொழிச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வானியல் குறித்தும், தொலைதூர கோள்களை பார்வையிடுவது குறித்து மாணவர்களுக்கு தொலைநோக்கி வாயிலாக விளத்தி கூறினார்.

Tags

Next Story