மாவட்ட சிறையிலிருந்து வரும் கழிவு நீரால் பாதிப்பு !

நாகர்கோவிலில் மாவட்ட சிறையிலிருந்து வரும் கழிவு நீர் கலெக்டர்  அலுவலக வளாகத்தில் வருவதால் அதனை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் -நாகர்கோயில் மண்டல பேரூராட்சிகளின் உதவிஇயக்குனர் அலுவலகம் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையில் இருந்து கழிவுநீரானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள வளாகத்தில் பாய்வதால் அங்கிருந்து கழிவு நீர் பேரூராட்சிகளின் இணை இயக்குனர் அலுவலக வளாகத்தினுள் சூழ்ந்து உள்ளது. இதனால் அங்கு செல்லும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. மேவும், பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் , மற்றும் அங்கு செல்லும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நேரடியாக பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டு, சிறைச்சாலையில் இருந்து குழாய் சேதமடைந்து, வெளியேறும் கழிவு நீர் பைப்பை அடைத்து விடவும் அல்லது மாற்று இடத்தில் கழிவுநீரை விடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story