12 ஆண்டுகளாக நடைபெற்ற சுரங்கப்பாதை பணி நிறைவு

12 ஆண்டுகளாக நடைபெற்ற சுரங்கப்பாதை பணி நிறைவு

சுரங்கப்பாதை

திண்டுக்கல் நேருஜி நகர் சுரங்கப்பாதை 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஒரு வழியாக தற்போது நேரூஜிநகர் பெஸ்கிகாலேஜ் ரோடு இணைக்கும் பாலம் வேலை நிறைவுபெற்று பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது.
நேரூஜிநகர் பெஸ்கிகாலேஜ் ரோடு இணைக்கும் பாலம் வேலை நிறைவுபெற்று பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது. திண்டுக்கல் திருச்சி ரோட்டில் மேம்பாலம் கட்டும்போது இதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. குறுகிய பாலமாக சுரங்க பாலம் அமைக்கப்பட்டது.தொடர்ந்து மழை பெய்தால் தண்ணீர் அனைத்தும் அந்தப் பாலத்திற்கு கீழே வந்து சேரும் என்பதால் பணிகளை செய்ய முடியாமல் ஒப்பந்ததாரர்கள் திணறி வந்தனர். இதனால் பல கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை கட்டி முடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.இந்நிலையில் ஒரு வழியாக பால வேலை முடிந்து பணிக்கு தொடங்கி இருப்பது அனைவரிடமும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story