எட்டுக்குடியில் 41ஆண்டுகளுக்குப் பிறகு  தைப்பூச தெப்ப திருவிழா

எட்டுக்குடியில் 41ஆண்டுகளுக்குப் பிறகு  தைப்பூச தெப்ப திருவிழா

தெப்ப உற்சவம் 

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள எட்டுக்குடியில் முருகனின் கோயிலில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு  தைப்பூச தெப்ப திருவிழா நடைபெற்றது.

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான சுப்பிரமணிய சுவாமி (முருகன்) திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு தைப்பூச தெப்ப திருவிழா நடைபெற்றது.

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் தெப்ப திருவிழா நடை பெற்றது. முன்னதாக சிறப்பு மலர் அலங்காரத்தில், முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் படிசட்டத்தில் ஆலய உலா காட்சி நடைபெற்றது. பின்னர் தெப்பத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து நாதஸ்வரம், வயலினுடன் மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் மூன்று முறை குளத்தில் வலம் வந்ததது. 41 ஆண்டுகளுக்கு பிறகு தை பூசதன்று நடைபெறும் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் கிராமவாசிகள் உபயதாரர்கள் செய்தனர்

Tags

Next Story