ஆபாச வீடியோ மிரட்டல் வழக்கிற்குப்பிறகு ஆதீனம் பங்கேற்ற நிகழ்ச்சி

ஆபாச வீடியோ மிரட்டல்  வழக்கிற்குப்பிறகு ஆதீனம் பங்கேற்ற நிகழ்ச்சி

விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் 

திருக்கடையூர் அருகே திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அசுபதி தீர்த்தவாரி திருவிழாவில் தருமபுர ஆதீனம் இன்று பங்கேற்றார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருமெய்ஞானம் கிராமத்தில் பிரம்மன் உயிர் பெற்ற தலம் என்ற சிறப்புடைய பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைப்பெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று கோவிலில் அசுபதி தீர்த்தவாரி நடைப்பெற்றது. இந்த நாளில் புனித நீராடுவது சிறப்பு என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவில் கிணற்றிலிருந்து தண்ணீரை ஊற்றி புனித நீராடினர் . இந்த நீர் காசிக்கு இணையாக புனித நீராக கருதப்படுகிறது.

தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரருக்கு இந்த நீரைக்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆண்டில் இந்த ஒரு நாள் மட்டும் அந்த கிணற்றில் புனித நீராடுவதற்கு பக்தர்கள் அனுமதி உள்ளது . இதனையொட்டி பிரம்மபுரீஸ்வரருக்கு தீப வழிபாடும் பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, பல்வேறு வாசனை திரவியப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைப்பெற்றது. தீர்த்தவாரியில் தருமை ஆதினம் 27 வது குருமகா சன்னிதானம் கலந்துகொண்டு புனித நீராடி தரிசனம் செய்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடியும் சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆதீனத்தின் ஆபாச வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறிக்க நடந்த முயற்சி வழக்கு சம்பத்திற்குப் பிறகு தருமபுரம் ஆதீனம் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் .

இறுதியாக கடந்த 6ஆம் தேதி கடலூரில் தமிழக முதல்வரை சந்தித்தார். அதற்கு பிறகு இன்று திருக்கடையூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story