ஆண்டுகள் கடந்தும் சீரமைக்கப்படாத அகத்தீஸ்வரர் கோவில் குளம்

ஆண்டுகள் கடந்தும் சீரமைக்கப்படாத அகத்தீஸ்வரர் கோவில் குளம்

அகத்தீஸ்வரர் கோவில் குளம்

வளசவராக்கம், அகத்தீஸ்வரர் கோவில் குளத்தை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து, விரைந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் என, அறிவித்த 1.6 ஆண்டுகள் கடந்தும் சீரமைக்கப்படாததால், மிக்ஜாம் புயல் மழையால் குளம் நிரம்பி வழித்து கோவிலில் மழைநீர் தேங்கியது.
வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள இந்த கோவிலை ஒட்டி, 1.87 ஏக்கர் பரப்பில் திருக்குளம் அமைந்துள்ளது. குளத்திற்கு போதிய வரத்து கால்வாய் இல்லாததால் வறண்டு காட்சியளித்தது. பக்தர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதனையேடுத்து குளத்தில் மழை நீர் தேங்கும் வகையில், மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. மேலும், 87 லட்சம் ரூபாய் செலவில், குளத்தை துார் வாரி, கரையமைத்து, நடைபாதை, மின் விளக்குகள் அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. ஒப்பந்தப்படி இப் பணிகள், 2021 செப்., 30 ம் தேதியுடன் நிறைவு பெற்றிருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால், குளத்தை சீரமைக்கும் பணிகள் தடைபட்டது. இந்த நிலையில், கோவில் குளத்தில் மழை நீர் வடிகால் துார்வாரிய, கழிவுநீர் கலந்த மண்ணை நிரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags

Next Story