காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் தேக்கம்: பொதுமக்கள் அவதி

காவிரி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளால் பொதுமக்கள் நீரை பயன்படுத்த முடியமால் அவதியடைந்து வருகின்றனர்.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்ததால் , குமாரபாளையம் ,பள்ளிபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.. இதன் காரணமாக காவிரி ஆற்று நீரில் மிதந்து நிற்கும் ஆகாய கங்கை தாமரை செடிகள் ,பள்ளிபாளையம் பெரியார் நகர் ,உள்ளிட்ட காவிரி கரையோரம் அதிகளவு படர்ந்து உள்ளதால், தினசரி ஆற்றுநீரை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் குளிக்க, துணி துவைக்க, வரும் பொதுமக்கள் ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் உள்ளதால் ,அவதி அடைந்து வருகின்றனர்.


மேலும் அந்தச் செடிகள் உடலில் மேலே பட்டால் தோல் அரிப்பு பொன் உள்ளிட்ட அலர்ஜிகள் ஏற்படுவதால், போர்க்கால அடிப்படையில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story