அக்னி நட்சத்திர தோஷ பரிகார நிறைவு நாள் பூஜை

அக்னி நட்சத்திர தோஷ பரிகார நிறைவு நாள் பூஜை

வாலாஜா வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ பரிகார நிறைவு நாள் பூஜை நடைபெற்றது.


வாலாஜா வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ பரிகார நிறைவு நாள் பூஜை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த மேல்புதுப்பேட்டை பசும்பொன் நகரில் உள்ள ஸ்ரீவேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பரிகார பூஜையின் நிறைவு நாள், பக்தகோடிகளின் உடல் ஆரோக்கியம் பெறவும், அனைத்து உயிர்களின் வாழ்வாதாரத்திற்கு மழை வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஸ்ரீஜலகுரு பழனி சுவாமிகள் யாக பூஜை செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமகா ருத்ர சுவாமிகள், வாசுதேவ சுவாமிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story