கலசபாக்கத்தில் பூத் கமிட்டி படிவம் வழங்கிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி

கலசபாக்கத்தில் பூத் கமிட்டி படிவம்  வழங்கிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி
X

பூத்கமிட்டி படிவம் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் அதிமுக ஆட்சியில் செய்த நன்மைகள் பற்றி மக்களுக்கு தெளிவான முறையில் எடுத்துக் கூறி பூத் கமிட்டி படிவத்தை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்எல்ஏ வழங்கினர். அப்போது பேசியதாவது கலசபாக்கம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள எர்ணமங்கலம், சோழவரம், கடலாடி, தென்மாதிமங்கலம், மேல்பாலு, கீழ்பாலூர், வீரளூர், மேல்சோழங்குப்பம், ஆதமங்கலம்புதூர், கேட்டவரம்பாளையம், சிறுவள்ளூர் தேவராயன்பாளையம், வெங்கட்டம்பாளையம், காந்தபாளையம், கிராமம்பாளையம், அய்யம் பாளையம், எள்ளுப்பாறை, மேலாரணி, மேல்வில்வராயநல்லூர், சேங்கபுதேரி, மற்றும் பல ஊராட்சிகளில் பூத் கமிட்டி படிவத்தை வழங்கி பூத் கமிட்டி படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து வரும் 14ஆம் தேதிக்குள் அனைத்து பூர்த்தி செய்த படிவத்தையும் தமிழக முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நாம் ஒப்படைக்க வேண்டும். அவரிடம் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கழக பணியை சிறப்பான முறையில் செயல்படுகிறது என்ற நல்ல பாராட்டையும் பெற வேண்டும். அதற்கான பணியை நாம் அனைவரும் அயராமல் செய்வோம் என்றார். அப்போது கட்சி நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் அதிமுக செய்த நலத்திட்ட உதவிகளை பற்றி எடுத்துக் கூறினார். அப்போது கடந்த அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு திருமண உதவி ரூ 50 ஆயிரம் தாலிக்கு தங்கமும் வழங்கியது, அதிமுக ஆட்சி தான் பொது மக்கள் மருத்துவம் பார்ப்பதற்கு அங்கும் இங்கும் அலையக்கூடாது என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவர்கள் தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். அதன் மூலம் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மக்கள் அனைவரும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர் .அதேபோல் சத்துணவு திட்டத்தையும் கொண்டு வந்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தான். இந்த திட்டமும் அதிமுக ஆட்சியில் தான் துவங்கப்பட்டது .குடும்ப அட்டைக்கு இலவச அரிசி வழங்கியது அதிமுகஆட்சி தான், விவசாய கடன் அதிகளவு தள்ளுபடி செய்ததும் அதிமுக ஆட்சி தான் அதே போல் மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்காக 14 வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கியதும் அதிமுக ஆட்சி தான்இதுபோல தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை வழங்கியது அதிமுக ஆட்சியில் தான் அதிகமான திட்டங்கள் வழங்கப்பட்டது என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி -கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ பூத்கமிட்டி படிவத்தை வழங்கிய போது கட்சி நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கி.அரவிந்தன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன் மற்றும் கழக முக்கிய பிரமுகர்கள் கவுன்சிலர்கள் வார்டு உறுப்பினர்கள் இருந்தனர்

Tags

Next Story