கந்தர்வகோட்டையில் உழவு பணிகள் தீவிரம்!

கந்தர்வகோட்டையில் உழவு பணிகள் தீவிரம்!

நிலத்தை உழுது சீரமைக்கும் பணி

கந்தர்வகோட்டை பகுதியில் அண்மையில் பெய்த கோடை மழையை பயன்படுத்தி, விவசாயிகள் தங்களது வயல்களை இயந்திரம் கொண்டு உழுது சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாள்களாக கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் சிறிதளவு தேங்கியது. வயல் பகுதிகளில் தேங்கிய தண்ணீர் கால்நடைகளுக்கு உகந்ததாக உள்ளது.இந்த மழையின் காரணமாக, செடி, கொடி புற்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. இது கால்நடைகளுக்கு உகந்ததாக உள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கூறுகின்றனர். மழை குறித்து விவசாயிகள் கூறியதாவது: கோடை மழையை பயன்படுத்தி, வயல்களை உழுது சமன் செய்தால், தேவையற்ற புல் பூண்டு முளைக்காமல் விவசாயத்திற்கு ஏற்ற நிலையில் வயல்கள் இருக்கும் என்றனர்.இதன்படி, விவசாயிகள் தங்கள் வயல்களை இயந்திரம் கொண்டு உழுது சீர்மைக்கும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story