வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு மக்காச்சோள செயல்முறை விளக்கம் அளிப்பு

வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு மக்காச்சோள செயல்முறை விளக்கம் அளிப்பு

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பு

அப்பமசமுத்திரம் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு மக்காச்சோள செயல்முறை விளக்கங்கள் அளித்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அப்பம சமுத்திரம் பகுதியில் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது , இவ்விழாவில் முசிறி பகுதியைச் சேர்ந்த எம் ஐ டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் மக்காச்சோள விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கங்கள் அளித்தனர் இதில் மக்காச்சோள விவசாயிகளுக்கு படைப்புலு தாக்கத்தை குறைப்பதற்கும் மற்றும் மேலாண்மை செயல்முறைகளை பற்றியும் விளக்கம் அளித்தனர்.

மேலும் விவசாயிகளுக்கு நுண்ணுயிரி உரமான டிரைக்கோ டெர்மா, விரிடி (மண் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது) வழங்கப்பட்டது இதில் மாணவிகள் இந்த நுண்ணுயிரி உரத்தின் நன்மைகள் மற்றும் பலனை விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர் இதில் அப்பகுதியில் உள்ள விவசாய பெருமக்கள் மற்றும் மாணவிகள் நந்தினி, மரகதம், மௌனிகா, கிளெமென்டினா, நர்மதா , நித்யஸ்ரீ பவித்ரா, தாரணி, பிரகதி, புஷ்பலதா, ராஜி, ஆகியோர் செயல்முறைகளை விளக்கினர்.

Tags

Next Story