வேளாண்மை கல்லூரி மாணவிகள் 3G கரைசல் குறித்து செயல்முறை விளக்கம்

வேளாண்மை கல்லூரி மாணவிகள் 3G கரைசல் குறித்து செயல்முறை விளக்கம்

செயல் விளக்கம் அளித்த மாணவிகள் 

செட்டிகுளம் பகுதியில் நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவிகள் 3G கரைசல் குறித்து செயல் முறை விளக்கம் அளித்தனர்.
திருச்சி மாவட்டம் எம்.ஆர். பாளையம் நாளந்தா வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், செட்டிக்குளம் கிராமத்தில் தங்கி கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பயிர்களை பெரிதும் பாதிக்கும் இலைப்பேன், அசுவினி பூச்சி போன்றவற்றை கட்டுப்படுத்த 3G கரைசலை பயன்படுத்த விவசாயிகளை அறிவுறுத்தினர். மேலும் செயற்கை உரங்களுக்கு மாற்றாக பயன்படுத்துவதால் மண் வளம் மேம்பாடு அடையும் எனவும் எடுத்துரைத்தனர்.

Tags

Next Story