வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி
சேலம் மாவட்டம், ஓதியத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தை வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.
கெங்கவல்லி வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ், தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவ மாணவிகள் கிராமத்தில் தங்கி அனுபவ பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ், கெங்கவல்லியில் தங்கியுள்ளனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஓதியத்தூர் ஊராட்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை சந்தைக்கு சென்று, அங்கு நடக்கும் டெண்டர், டிரேடிங் முறைகள் பற்றி அறிந்து கொண்டனர்.
பின்னர், நடைமுறைகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினர். மாணவிகளுக்கு அங்கு நடக்கும் நடைமுறைகளை பற்றி. ஓதியத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் மணியரசன் எடுத்துரைத்தார்.
Next Story