மண் பரிசோதனைக்கு மண் எடுப்பது குறித்து ஆலோசனை

மண் பரிசோதனைக்கு மண் எடுப்பது குறித்து ஆலோசனை

மண் பரிசோதனை

மண் பரிசோனைக்கு மண் எடுப்பது குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மண் பரிசோதனைக்கு மண் எடுப்பது குறித்து பழனியில் வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து விடுத்துள்ள பத்திரிக்கை குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: "மண் மாதிரி ஆய்வுக்கு அரை கிலோ மண் கொடுத்தால் போதும். அந்த அரை கிலோ மண் குறிப்பிட்ட நிலத்திற்கு சரியான மாதிரியாக இருந்தால் தான் நிலத்தின் உண்மையான வளம் தெரியும். மண் மாதிரி எடுக்கும் போது ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பும் மண் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஒரு பயிர் அறுவடை செய்த பின்பும் இடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் உள்ள இடைபப்பட்ட காலத்தில் தான் மண் மாதிரி எடுக்க வேண்டும். ஒரு நிலத்தின் மண் வெவ்வேறாக இருந்தால் தனித் தனியாக மாதிரி எடுக்க வேண்டும்" என தெரிவித்திருந்தனர்.

Tags

Next Story