வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்

வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்

ஆட்சியர் லட்சுமிபதி 

தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் 2023-24ல் தேர்வு செய்யப்பட்டுள்ள 87 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் 2023-2024ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 87 கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கிராமங்களில் 07.02.2024 மற்றும் 28.02.2024 ஆகிய இரு தினங்களில் வேளாண்மைத்துறை மற்றும் பல்வேறு விவசாயம் சார்ந்த துறைகள் ஒருங்கிணைந்து விவசாயிகள் பயனடையும் வண்ணம் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தல், PM KISAN மற்றும் பிற திட்டங்களில் பயனாளிகளை பதிவு செய்தல், வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பம் பெறுதல், கால்நடைகள் நலம் பேண முகாம் (கால்நடைகளுக்கு செயற்கை கருத்தரித்தல் மற்றும் குடற்புழு நீக்கம் செய்தல்), பயிர்கடன் வழங்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பம் பெறுதல் என விவசாய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, 2023-2024-ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் 87 கிராம பஞ்சாயத்துகளைச் சார்ந்த விவசாயிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டு மென மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கேட்டுக்கொள்கிறார்.

Tags

Next Story