வேளாண் விரிவாக்க மையம் கட்டிடம் திறப்பு விழா

வேளாண் விரிவாக்க மையம் கட்டிடம் திறப்பு விழா

ஒருங்கிணைந்த வேளாண் மையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம்,அனக்காவூர் பகுதியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

செய்யாறு அருகே அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2 கோடியே 41 லட்சத்து 65, ஆயிரம் மதிப்பீட்டில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் கிடங்கு கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அதே சமயம் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து கட்டிடத்தை பார்வையிட்டார்.

உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் அனக்காவூர் ஒன்றிய தலைவர் திலகவதி ராஜ்குமார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி முருகேசன் அனக்காவூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திராவிட முருகன் அனக்காவூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story