"பணி முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத வேளாண் விரிவாக்க மைய கட்டடம்"

பணி முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத வேளாண் விரிவாக்க மைய கட்டடம்

வேளாண் விரிவாக்க மைய கட்டடம்

திருமுக்கூடல் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட வேளாண் விரிவாக்க மையம் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வருமா என எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தைச் சுற்றி புல்லம்பாக்கம், வயலக்காவூர், மதூர், சித்தாலப்பாக்கம், அருங்குன்றம், பழவேரி, பினாயூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராம விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் சாகுபடி செய்வதற்காக நெல் விதைகள் மற்றும் உரங்களை திருமுக்கூடலில் உள்ள துணை வேளாண் விரிவாக்க மையத்தில் பெறுகின்றனர். திருமுக்கூடல் துணை வேளாண் விரிவாக்கம் மையத்திற்கான கட்டடம் கடந்த பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால், போதுமான இட வசதி இல்லாமல், விவசாயத்திற்கான விதைகள் மற்றும் உர மருந்துகள் வைத்து பராமரிக்காத இயலாத நிலை இருந்து வருகிறது. இதனால், திருமுக்கூடலில் உள்ள துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த சுற்று வட்டார கிராம விவசாயிகள் கோரி வந்தனர். அதன்படி திருமுக்கூடல் துணை வேளாண் விரிவாக்கம் மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேளாண் துறை சார்பில் 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பணி துவங்கியது. தற்போது பணி முழுமையாக நிறைவு பெற்றும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. தற்போது சாகுபடி பணிகள் நடைபெறுவதால், புதிய வேளாண் விரிவாக்கம் மைய கட்டடத்தை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர திருமுக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story