பட்டுக்கோட்டையில் வேளாண்மைக் கண்காட்சி

பட்டுக்கோட்டையில் வேளாண்மைக் கண்காட்சி

கண்காட்சியில் கலந்து கொண்டவர்கள் 

பட்டுக்கோட்டையில் வேளாண்மைக் கண்காட்சியில் பாரம்பரிய நெல் ரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள், ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ், பட்டுக்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மைக் கண்காட்சியை நடத்தினர்.

இதில், பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டனர். இக்கண்காட்சியில் பாரம்பரிய நெல் ரகங்கள், நுண்ணுயிர் உரங்கள், உயிரியல் முறைக்கட்டுப்பாடு, பசுந்தாள் உரங்கள், ஒருங்கிணைந்த வேளாண்மை முறை, தென்னையில் ஊடு பயிர்கள் வளர்ப்பு ,

தென்னையில் பூச்சி மேலாண்மை, மண் மாதிரி சேகரிப்பு, இயற்கை வழி வேளாண்மை போன்ற பல்வேறு விதமான வேளாண் தகவல்களை விவசாயிகள் அறிந்து கொண்டனர்.

Tags

Next Story