பட்டுக்கோட்டை உழவர் சந்தையில் வேளாண் பொருட்காட்சி

பட்டுக்கோட்டை உழவர் சந்தையில் வேளாண் கருத்து காட்சி மற்றும் பொருட்காட்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், ழஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி சார்பில் வேளாண்மை பொருட்காட்சி நடைபெற்றது. ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் இப்பொருட்சியை நடத்தினர். பட்டுக்கோட்டை விவசாயிகளும் பொதுமக்களும் இப் பொருட்காட்சியை கண்டுகளித்தனர். இதில் தழைக்குளம், பட்டுப்புழு வளர்ப்பு, தேனி வளர்ப்பு பெட்டி, உயிரி எரிபொருள் அமைப்பு, ஒருங்கிணைந்த விவசாய முறை அமைப்பு, உணவுப் பிரமிடு, மல்டிப்ளூம் தொழில்நுட்ப அமைப்பு, திரவ உயிர் உரங்கள், அவற்றின் பயன்கள் சோலார் பூச்சிப்பொறி அமைப்பு, பட்டுக்கோட்டை வட்டாரத்தில் பயிரிடப்படும் பயிர் ரகங்களான நெல் மற்றும் உளுந்து ரகங்கள் போன்ற சிறிய வேலை மாதிரிகள் இப் பொருட்காட்சியில் வைக்கப்பட்டது. விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் புரியும் வகையில் மாணவர்கள் விளக்கினர். இதில் வேளாண்மை அலுவலர் சன்மதி மற்றும் அட்மா திட்ட உதவி தொழில் நுட்பம் மேலாளர் ரமேஷ் கலந்து கொண்டனர். நிறைவாக இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

Tags

Next Story