ஜனவரி 30ல் வேளாண் குறைதீர் கூட்டம்

ஜனவரி 30ல் வேளாண் குறைதீர் கூட்டம்

ஜனவரி 30ல் வேளாண் குறைதீர் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் குறைத்தீர்கூட்டம் வருகின்ற 30ம் தேதி ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி 2024-ஆம் மாதத்திற்கான வேளார் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் 30.01.2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம். பிற்பகல் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story