ஈரோடு மாவட்டத்தில் வரும் வெள்ளியன்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்
வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் 2023-ஆம் மாதத்திற்கான வேளார் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வருகிற வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம். மேலும், பிற்பகல் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெருமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story