வீட்டில் சாப்பாடு சரியில்லாததால் விவசாய கூலி தற்கொலை
தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வீட்டில் சாப்பாடு சரியில்லாததால் விவசாய கூலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சோலை பூஞ்சேரி கீழ தெருவில் வசித்து வந்தவர் கார்த்திகேயன் 35 விவசாயக் கூலி குடிப்பழக்கம் உள்ளவர். இவர் சம்பவத்தன்று வீட்டில் சாப்பாடு சரியில்லை என்று கோபித்து கொண்டு சென்று விட்டார் பின்னர் கிராமத்தில் ஒரு வாழைக்கொல்லையில் விஷ பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு விட்டார் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் இறந்து விட்டார். இது குறித்து அவருடைய மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்.
Next Story