விதைப்பண்ணை நிலத்தில் வேளாண் அதிகாரி ஆய்வு

விதைப்பண்ணை நிலத்தில் வேளாண் அதிகாரி ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கடம்பூர் விதைப்பண்ணை நிலத்தில் வேளாண் அதிகாரி ஆய்வு மேற்கொண்டனர்.

வாணாபுரம் அடுத்த கடம்பூரில் ஏ.டி.டி., 53 ரகம் கொண்ட நெல் மற்றும் கோ-15 ரகம் கொண்ட கேழ்வரகு விதைப்பண்ணை உள்ளது. விதை சான்று அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி விவசாயிகள் தரமான விதைகளை உற்பத்தி செய்து மீண்டும் வேளாண் துறைக்கு நேரடியாக விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில், மத்திய, மாநில திட்ட வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, விதைப்பண்ணை நிலத்தை ஆய்வு செய்தார். அப்போது, நீர் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்தும், கூடுதல் மகசூல் பெற்று லாபம் பெற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, வேளாண்மை உதவி இயக்குநர் ஷியாம்சுந்தர், உதவி விதை அலுவலர் சுரேஷ்குமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி, விவசாயிகள் அன்பரசு, ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story