பயிர் மருத்துவ முகாமை பார்வையிட்ட வேளாண்மை ஆராய்ச்சி விஞ்ஞானிகள்!

பயிர் மருத்துவ முகாமை பார்வையிட்ட வேளாண்மை ஆராய்ச்சி விஞ்ஞானிகள்!

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் நடந்த பயிர் மருத்துவ முகாமை வேளாண்மை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் பார்வையிட்டனர்.


புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் நடந்த பயிர் மருத்துவ முகாமை வேளாண்மை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் பார்வையிட்டனர்.

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் பயிர் மருத்துவ முகாம் மற்றும் அறிவியல் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்பாடு குறித்த செயல் விளக்கக் கண்காட்சியை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் பார்வையிட்டனர். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பயிர் மருத்துவ முகாம் புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

முகாமில்,அறிவியல் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை விவசாயப் பணிகளுக்கு எவ்வாறு பயன்படுத்துவது குறித்த செயல் விளக்கக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை, புதுதில்லியைச் சேர்ந்த இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் குழுவினர் சி. வே. தங்கரையா, சீட்ராம் சர்மா, அனுப்குமார்தாஸ், கே.எம். மஞ்சையா ஆகியோர் பார்வையிட்டனர். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய் நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார், பயிர்மருத்துவர்கள் பி. செந்தில்குமார் மற்றும் கே. பாரதிதாசன் ஆகியோர் குழுவினருக்கு விவரித்தனர்.

கல்லூரியின் மேலாண்மை இயக்குநர் ஆர். துரை, செயலர் எம். ராஜாராம், முதல்வர் எஸ். ரகுராமன் மற்றும் விவசாயிகள், கல்லூரி மாணவர்கள் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் டி. விமலா, ஆர். வினோத் கண்ணா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags

Next Story