திருச்சிற்றம்பலத்தில் வேளாண் விற்பனை மையக் கட்டடம்

பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சிற்றம்பலத்தில் வேளாண் விற்பனை மையத்திற்கு புதிய கட்டிடம் ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சிற்றம்பலத்தில், சவிவசாய பெருங்குடி மக்கள் பலன் பெறும் வகையில், வேளாண்மைத் துறை சார்பில், வேளாண் விற்பனை மையத்திற்கு புதிய கட்டிடம் ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்கான பணியை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதேபோல், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெய்வேலி தென்பாதி ஊராட்சியில் முத்தரையர் தெருவில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியையும் சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், மாவட்டக் குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, திருவோணம் தெற்கு ஒன்றியச் செயலாளர் சோம.கண்ணப்பன், பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன், திருவோணம் ஒன்றியப் பெருந்தலைவர் செல்லம் சௌந்தர்ராஜன், ஆர்.கே.பி.குமார், டாக்டர் வி. சௌந்தர்ராஜன், சந்திரபோஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுகி, பொய்யாமொழி, ஊராட்சி மன்றத் தலைவர்கள், பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ராணி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story