சேலம் மகேந்திரா பொறியியல் கல்லூரியில் வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி
கண்காட்சி கலந்து கொண்டவர்கள்
சேலம் மின்னாம்பள்ளி மகேந்திரா பொறியியல் கல்லூரியில் வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. மகேந்திரா குழுமங்களின் செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன் தலைமை தாங்கினார்.
மகேந்திரா பொறியியல் கல்லூரி முதல்வர் மோகனசுந்தர்ராஜூ வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் முதல்வர் வெங்கடாசலம் கலந்து கொண்டு, வேளாண் எந்திரமயமாக்கல் பற்றிய மதிப்பீடும் மற்றும் செம்மைப்படுத்தலும் என்ற தலைப்பில் பேசினார்.
இதையடுத்து மகேந்திரா கல்வி நிறுவனங்களின் மாணவ-மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி விளக்கினர். மேலும் 30-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அவற்றில் புதுமையான வாகன வடிவமைப்பு, வேளாண் பொருட்கள் மற்றும் தானியங்கி மின்சார வாகனங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு எந்திரவியல் துறை தலைவர் பாலமுருகன் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இதில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.