மண்மலை கிராமத்தில் விவசாய பயிற்சி கூட்டம்
விவசாய பயிற்சி கூட்டம்
மண்மலை கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 'கிசான் கோஸ்தி' விழிப்புணர்வு விவசாய பயிற்சி கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 'கிசான் கோஸ்தி' விழிப்புணர்வு விவசாய பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சைமன் வரவேற்றார். கூட்டத்தில், துணை இயக்குனர் விஜயராகவன் இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய நெல்சாகுபடி குறித்து பேசினார். மேலும், உயிர் உரங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும், வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானிய விலையில் கிடைக்கும் இடுபொருட்கள், ஆத்மா திட்டத்தின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. கூட்டத்தில், வேளாண் அலுவலர் பாபு, ஆத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சக்திவேல், மணிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி தலைவர் தென்னரசு நன்றி கூறினார்.
Next Story