விதை சுத்திகரிப்பு நிலையத்தில் வேளாண் பணி அனுபவம்
வேளாண் மாணவர்கள்
தஞ்சை அருகே வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் பணி அனுபவம் பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கான விதை சுத்திகரிப்பு நிலையம், தஞ்சை அருகே காட்டுத்தோட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனை, ஈச்சங்கோட்டை முனைவர்.எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக பார்வையிட்டனர்.
வேளாண் துறை அலுவலர் பசுபதி ரேணுகா நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் விதைகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ் குறித்தும் மாணவிகளுக்கு விளக்கினர். விவசாயிகள் அளிக்கும் வயல் மட்ட விதைகளை 90 நாட்களுக்குள் சுத்திகரிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுவது பற்றியும் விவசாயிகள் வயலில் நடத்தப்படும் ஆய்வுகள் குறித்தும் விரிவாக மாணவிகள் அறிந்தனர். மேலும் சுத்திகரிக்கும் முறையின் செயல்பாடுகளையும் கண்டறிந்தனர்.
Next Story