குன்றத்துாரில் விவசாய பணிகள் தீவிரம்

குன்றத்துாரில் விவசாய பணிகள்  தீவிரம்

நடவு பணிகள் 

மழையால் ஏரி, குளங்கள், கிணறுகள் நிரம்பியதால் மகிழ்ச்சியடைந்த குன்றத்தூர் வட்டார விவசாயிகள், நவரை பருவ சாகுபடிக்கு தயாராகியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் தாலுகாவில் சோமங்கலம், சேத்துப்பட்டு, கரசங்கால், படப்பை, ஆதனுார், மலைப்பட்டு, செரப்பணஞ்சேரி, காவனுார், வலையகரணை, வட்டம்பாக்கம், வடக்குப்பட்டு ஆகிய பகுதியில் நெற்பயிரிட நிலத்தை உழுது, நீர் பாய்ச்சி நெல் விதைக்க தயாராகி வருகின்றனர். மேலும், 120 நாள் கொண்ட நவரை சாகுபடிக்கு போதிய தண்ணீர் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்."

Tags

Next Story